காஞ்சிபுரம் அருகே கோர விபத்து: 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்...!
காஞ்சிபுரம் அருகே அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாயினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காஞ்சிபுரம்: காஞ்சிரபுரம் அருகே மினி வேனும் தனியார் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காஞ்சிபுரம் அருகே உள்ள கோழிப்பண்ணையில் பாஸ்கர், ஆசிப், ஹுசைன் ஆகிய 3 பேர் பணி புரிந்து வந்தனர். நேற்றிரவு வழக்கம் போல் பணியை முடித்து விட்டு 3 பேரும் மினி வேனில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ராஜகுளம் அருகே தனியார் நிறுவன பேருந்து ஒன்று ஊழியர்களுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த மினி வேன் பேருந்து மீது வேகமாக மோதியது. இதில் மினிவேண் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் மினிவேனில் பயணம் செய்த பாஸ்கர், ஆசிப், ஹுசைன் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மினி வேனை ஓட்டிச்சென்ற பாஸ்கர் அதிவேகமாக சென்றதோடு முன்னாள் சென்ற வாகனத்தையும் முந்த முயன்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications