தேர்தல் ஜூரம் ஓய்ந்தது.. பற்றிக் கொண்ட +2 தேர்வு முடிவு ஜூரம்.. முண்டியடிக்கும் கல்லூரிகள்
நெல்லை: லோக்சபா தேர்தல் ஜூரம் தமிழகத்தில் கிட்டத்தட்ட ஓய்ந்து விட்டது. ரிசல்ட்டுக்காக மக்களும், கட்சிகளும் காத்துள்ளனர். இந்த நிலையில் பிளஸ்டூ ஜூரம் தற்போது விறுவிறுப்பாகியுள்ளது.
எதில் சேரலாம், எதைப் படிக்கலாம் என்ற மும்முரத்தில், விவாதங்களில், ஆலோசனைகளில் மாணாக்கர்களும், பெற்றோர்களும் தீவிரமாக உள்ளனர்.
அதேசமயம், பல தனியார் கல்லூரிகளில் இப்போதே அட்மிஷன் களை கட்டியிருப்பதால் பெற்றோர்களும், மாணவர்களும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

8.75 லட்சம் மாணவர்கள்
தமிழகத்தில் பிளஸ்டூ தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடந்தது. இதில் 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.

திருத்தம் முடிந்தது
இவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி 67 மையங்களில் நடந்தது. இந்த பணி முடிந்து தற்போது மாணவர்களின் மதிப்பெண் கணிணியில் பதிவேற்றம செய்யப்பட்டு வருகிறது.

மே 3ம் தேதி என்ஜீனியரிங் விண்ணப்பம்
மே 3ம் தேதி என்ஜீனியரிங் படிப்புக்கான விண்ணப்பம் வினியோகம் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக சுமார் 2 லட்சம் விண்ணப்பம் தயார் நிலையில் இருக்கின்றன.

மே 14 முதல் மருத்துவ விண்ணப்பம்
மருத்துவ கல்லூரிகளில் மே 14ம் தேதி முதல் 31 தேதி வரை விண்ணப்பம் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளன.

கலைக் கல்லூகளில் சூடான அட்மிஷன்
இந்த நிலையில் கலை கல்லூரிகளும் 2014-15ம் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்காக தற்போதே தயாராகி வருகின்றன. மே 2ம் தேதி முதல் தனியார் கலை கல்லூரிகளில் விண்ணப்ப வினியோகம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல தனியார் கல்லூரிகளில் நேற்றே விண்ணப்ப வினியோகம் தொடங்கி விட்டன. குறிப்பாக தன்னாட்சி கல்லூரிகளில் விண்ணப்ப வினியோகம் கன ஜோராக நடக்கிறது.

படையெடுக்கும் மாணவர்கள்
இதனையடுத்து விண்ணப்பம் வழங்கும் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் காலை முதலே படையெடுத்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.

ரிசல்ட் வந்ததும்
இவர்களுக்கு பிளஸ்டூ ரிசல்ட் வந்ததும் மதிப்பெண் மற்றும் இடஓதுக்கீட்டு அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என சம்பந்தப்பட்ட கல்லூரி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications