சென்னை அருகே 2500 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட தனியார் விமான நிலையம்.. விரைவில்!
சென்னை: சென்னையில் 2வது விமான நிலையத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அதை கிட்டத்தட்ட கை விட்டு விட்டது தமிழக அரசு. இந்த நிலையில் சென்னை அருகே அதாவது காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் பிரமாண்ட தனியார் வி்மானநிலையம் வரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விமான நிலையத்திற்காக அந்த தனியார் நிறுவனம் 2500 நிலப்பரப்பு நிலத்தை மதுராந்தகம் பகுதியில் கையகப்படுத்தியுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
இங்கு பிரமாண்டமான அளவில் புதிய விமான நிலையத்தை அமைப்பது தொடர்பாக அந்த நிறுவனம் விமான நிலைய ஆணையத்துடன் பேசி வருகிறதாம். இதை முழுமையாக தனியார் விமான நிலையமாக அமைப்பதா அல்லது கூட்டு ஒப்பந்தம் போட்டு நடத்துவதா என்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

மாமண்டூர் - மதுராந்தகம் இடையே
இந்த நிலம் மாமண்டூர் - மதுராந்தகம் இடையே வாங்கப்பட்டுள்ளதாம். இங்கு அதிக அளவில் குடியிருப்புகள் இல்லையாம். எனவேதான் இந்த இடத்தை குறி வைத்துள்ளனராம். தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த நிலம் உள்ளதாம்.

விரைவில் ஆய்வு
இந்த இடத்தில் விமான நிலையத்தை அமைக்கலாமா என்பது குறித்து விரைவில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஆய்வு செய்யவுள்ளதாம். சாத்தியக் கூறுகளை ஆராய்ந்த பின்னர் இது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளதாம்.

வேடந்தாங்கலுக்குப் பாதிப்பு வரும்
இதற்கிடையே, இந்த இடமானது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு அருகில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இதனால் சரணாலயத்திற்குப் பாதிப்பு வரக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

கைவிடப்பட்ட ஸ்ரீபெரும்புதூர்
முன்னதாக தற்போது உள்ள விமான நிலையத்திற்கு மாற்றாக ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பிரமாண்ட புதிய விமான நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தன. நிலம் கையகப்படுத்துவதிலும் சிக்கல் வந்தது. இதனால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது நினைவிருக்கலாம்.

தமிழக அரசு கையில்
இந்த விவகாரம் குறித்து இந்திய விமான நிலைய ஆணையத் தலைவர் குரு பிரசாத் மொஹபத்ரா கூறுகையில் மாநில அரசுதான் 2வது விமான நிலையம் தேவையா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். 2500 நிலம் விமான நிலையம் அமைக்க தேவைப்படும். அது உள்ளது. ஆனால் தேவையா என்பது மாநில அரசின் முடிவாகும் என்றார்.

யார் அந்த தனியார் நிறுவனம்?
நடப்பதைப் பார்த்தால் விமான நிலையத்தை முடிவு செய்து விட்டே இந்த விவகாரம் வெளியில் வருவது போலத் தெரிகிறது. மேலும் இவ்வளவு பெரிய நிலத்தை மொத்தமாக வாங்கியிருக்கும் அந்த தனியார் நிறுவனம் எது என்பதும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
ஏர்போர்ட் கட்டத்தானே நிலம் கொடுத்தோம்.. என்ன கொடுமை இது.. விஜய்க்கு எதிராக திரளும் பரந்தூர் மக்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications