பறக்கும் ஆம்புலன்ஸ்.. கோவை தனியார் மருத்துவமனையில் அறிமுகம்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை வரும் 25-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.

இந்தியாவில் மருத்துவத்திற்காக துவங்கப்படும் முதல் ஏர் ஆம்புலன்ஸ் சேவை இது என கூறப்படுகிறது. அவசர சிகிச்சை, நோயாளியின் உடல்நிலையை கண்காணிப்பது உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த ஹெலிகாப்டரில் அடங்கியுள்ளது.

 A Private hospital to launch air ambulance in tamilnadu

கடந்த 1992-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை எடுத்துச் செல்லவும், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரவும் பயன்பட உள்ளது.

டெல்லியைச் சேர்ந்த தனியார் விமான நிறுவனத்திடமிருந்து இரண்டாண்டு கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஹெலிகாப்டர் வாங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், மணிக்கு 240 கிலோ மீட்டர் வரை செல்ல கூடும் என மருத்துவமனை இயக்குனர் ராஜசேகரன் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
An air ambulance service of a private hospital in Tamil Nadu
Please Wait while comments are loading...