காவிரி விவகாரம்: புதுச்சேரியிலும் போராட்டம் விஸ்வரூபம் கர்நாடகா வங்கி முற்றுகை!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: காவிரியில் உரிய நீரை திறந்துவிடாத கர்நாடகா அரசைக் கண்டித்து புதுச்சேரி மாநிலத்திலும் போராட்டம் வெடித்துள்ளது. புதுச்சேரியில் கர்நாடகா அரசு வங்கியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் நாம் தமிழர் நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் காவிரி நீரை திறந்துவிட கர்நாடகா மறுத்து வருகிறது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் கோரி புதிய மனுவைத் தாக்கல் செய்தது கர்நாடகா. ஆனால் கர்நாடகாவின் இந்த செயலை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

Protests in Puducherry against Karnataka

இந்த நிலையில் தமிழகத்தில் கர்நாடகாவுக்கு எதிரான போராட்டங்கள் விஸ்வரூபமெடுத்துள்ளன. சென்னை, ராமேஸ்வரம், கோவை, சீர்காழியில் கர்நாடகாவுக்கு எதிராக போராட்டங்களும் கர்நாடகா வாகனங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

இந்த நிலையில் ஈரோட்டில் இன்று கர்நாடகா வங்கியை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதேபோல் கர்நாடகாவுக்கு எதிராக புதுச்சேரியிலும் போராட்டம் வெடித்துள்ளது.

Protests in Puducherry against Karnataka

புதுவையில் உள்ள கர்நாடகா வங்கியை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதேபோல் பல தமிழ் அமைப்புகளும் கர்நாடகா வங்கியை முற்றுகையிட முயன்றனர். அனைவரையும் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+