நித்யானந்தா சீடர்களை அடித்து விரட்டிய தஞ்சை மக்கள் !
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள பால்சாமி மடத்திற்கு வந்த நித்தியானந்தாவின் சீடர்களை அப்பகுதி மக்கள் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியில் அமைந்துள்ளது பால்சாமி மடம். இந்த மடத்திற்கு சொந்தமான வயல்வெளிகள் உள்ளன. இந்த மடத்தினை நிர்வகித்து வந்த பால்சாமி சித்தர் இறப்பிற்குப் பின்னர் துருவர் சித்தர் என்பவர் தற்போது நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில் பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 9 சீடர்கள் தஞ்சாவூர் வந்துள்ளனர். இதனையடுத்து அந்த சீடர்கள் பால்சாமி மடம் தங்களுக்குச் சொந்தமானது என கூறி அங்கிருந்தவர்களை வெளியேறும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆசிரம நிர்வாகிகளுக்கும் நித்தியானந்தா சீடர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் அங்கு திரண்ட பொதுமக்களும் நித்தியானந்தாவின் சீடர்களை ஓட ஓட அடித்து விரட்டியுள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் அந்த சீடர்களை தஞ்சை மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications