முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி
திமுக முன்னாள் அமைச்சர் மறைந்த கோ.சி.மணிக்கு அக்கட்சித் தொண்டர்களும் பொது மக்களும் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.
தஞ்சாவூர்: தஞ்சை அருகே ஆடுதுறையில் வைக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் மறைந்த கோ.சி.மணியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கும்பகோணத்தில் உடல் நலக்குறைவினால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக தஞ்சை ஆடுதுறையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக பொருளாலரும் அக்கட்சியின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் பிற்பகல் 12 மணி அளிவில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்.
திமுக முக்கிய பிரமுகர்களும் கோ.சி.மணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊரான மேக்கிரிமங்கலத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications