எங்கிருந்தோ வந்தவரிடம் அதிகாரமா?: மாநில அந்தஸ்து கொடுங்க.. புலம்பும் புதுவை ரங்கசாமி
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து- ஓர் ஆய்வு என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ரங்கசாமி, புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கினால்தான் நாங்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளை செயல்படுத்த முடியும்.
இல்லையெனில் தற்போது போல் எங்கிருந்தோ வந்தவரான ஆளுநரிடமே அதிகாரங்கள் இருக்கும். இப்படி ஆளுநரிடம் அதிகாரம் இருந்தால் இந்த மாநிலம் எப்படி வளர்ச்சியடையும். புதுச்சேரி மாநில நலனுக்காக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி சிந்திப்பதே இல்லை என்றார்.
புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் அண்மைக்காலமாக ஆளுநர் விரேந்திர கட்டாரியாவின் தலையீடு இருப்பதாலேயே அவரை முதல்வர் ரங்கசாமி விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications