ரவுடி சரத்குமார், ரவுடி செல்வக்குமார், நீங்க ஊருக்குள் நுழையக் கூடாது ஓ.கே.!!
புதுச்சேரி: புதுச்சேரியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வந்த இரண்டு ரவுடிகளுக்கு ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்படவுள்ளது.
புதுச்சேரியில் ரவுடிகள் தொல்லை அதிகரித்து வருவதாக அங்குள்ள மக்கள் தொடர்ந்து குறை கூறி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு அங்கு வணிகர்கள் கடையடைப்புப் போராட்டமும் நடத்தி அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து மாநில துணை நிலை ஆளுநரும் சட்டம் ஒழுங்கு குறித்து கவலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இரண்டு ரவுடிகளுக்கு ஊருக்குள் நுழைய மாவட்ட ஆட்சித் தலைவர் தடை விதித்து உத்தரவிடவுள்ளார்.
புதுவை முத்தியால்பேட்டை வாழைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார்(22). ரவுடியான இவர் மீது குழு மோதல் புகார்கள் மற்றும் கொலை வழக்குகள் உள்ளன. இவரால் அந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதால், அவரை மூன்று மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று முத்தியால்பேட்டை போலீசார் புதுவை ஆட்சியருக்குப் பரிந்துரைத்துள்ளனர்.
இதே போல் முதலியார்பேட்டை ஐயனார் கோவில் தெருவைச் சேர்ந்த ரவுடியான செல்வக்குமார்(42) மீதும் நடவடிக்கை எடுக்கும் வகையில், அவரை மூன்று மாதங்கள் வரை புதுவைப் பகுதிக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தீபக்குமாருக்கு முதலியார்பேட்டை போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications