ஆளுநரை அதிகாரிகள் நேரடியாக சந்திக்க தடை- புதுவை சட்டசபையில் நாராயணசாமி அதிரடி!
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் மோதல் முற்றியுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் கருத்து மோதல்கள் முற்றியுள்ளதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.
துணை நிலை ஆளுநர் கிரண்பேடி புதுவை மாநிலத்திற்கு வந்தது முதல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பரபரப்புக்கு பஞ்சம் வைக்காமல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.
புதுச்சேரிக்கு யார் முதல்வர் என்று யோசிக்கவைக்கும் அளவுக்கு கிரண்பேடி அதிரடிகள் காட்டுவதில் அம்மாநில அரசியல் வாதிகள் அதிர்ந்து போயுள்ளனர். இதை அவ்வப்போது ஆளும் கட்சியினர் வெளிப்படுத்தினாலும் கிரண் பேடியின் அதிரடி நடவடிக்கைகள் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 'தான் ஒரு துணை நிலை ஆளுநர் என்பதை மறந்து தரம் தாழ்ந்து கிரண்பேடி செயல்படுகிறார்' என்று ஆவேசமாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளம்பரம் தேடுகிறார்
இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் நாராயணசாமி," துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மக்கள் மீது உண்மையான அக்கறையில்லை. வெற்று விளம்பரத்துக்காக கிரண் பேடி செயல்பட்டு வருகிறார். கிரண்பேடியின் செயல்பாடுகள் துணை நிலை ஆளுநர் பதவிக்குத் தகுதியில்லாதவர் போல நடந்துகொள்கிறார்.
புதுவையின் எந்த அரசு அதிகாரிகளும் அமைச்சர்களின் அனுமதியின்றி துணை நிலை ஆளுநரை நேரில் சந்திக்க கூடாது. அப்படி சந்தித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அதிகாரிகளையும், மக்கள் தேர்ந்தெடுத்த சட்டசபை உறுப்பினர்களையும் ஊழல்வாதிகள் என்று கூறியுள்ளார் கிரண்பேடி. இப்படிப்பட்ட ஆளுநர் புதுச்சேரி மாநிலத்துக்கு தேவையா" என்று கூறியுள்ளார் முதல்வர்.
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க முடிவு
இந்த நிலையில் புதுச்சேரி மாநில அதிமுக எம்.எல்.ஏஎ. அன்பழகன், " மத்திய அரசு உடனடியாக துணை நிலை ஆளுநரை திரும்பப் பெறவேண்டும். இல்லையென்றால் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications