புதுச்சேரியிலும் 10ம் வகுப்பு தேர்வில் மாணவிகளே பெஸ்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளிலும் மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக அரசு சார்பில் பொதுத்தேர்வு எழுதிய பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டன. இதில் வழக்கம் போல இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தை போலவே அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் இன்று பத்தாம் வகுப்பு தேர்வுகள் வெளியிடப்பட்டன.

Puducherry SSLC results: 93.67% students clear the exam

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 53 அரசு பள்ளி மற்றும் 82 தனியார் பள்ளிகளை சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியிடப்பட்டன. இதன்படி புதுச்சேரியில் 93.67% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்வில் 95.9% மாணவிகளும், 91.5% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Puducherry union territorry also declared 10th board exams and girl students records 95.5 % pass whereas boys records 91.5% pass
Please Wait while comments are loading...