For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் 6 மாதத்தில் 1346 பேர் மீது குண்டர் சட்டம்... நெருக்கடியில் புழல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 1346 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சென்னையில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்கள்.

கடந்த ஜூன் மாதத்தில் 125 பேரும், ஜூலையில் 251 பேரும் அக்டோபர் மாதம் 294 குற்றவாளிகளும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் மாதம் அதிக பட்சமாக 324 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

அக்டோபரில் 313 பேர் மீதும், நவம்பர் மாதம் இதுவரை 39 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த 6 மாதத்தில் மட்டும் 1346 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

புழல் சிறையில் 1250 பேரை மட்டுமே அடைக்கக்கூடிய பகுதியில் 2 மடங்கு கைதிகள் கூடுதலாக அடைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அங்கு தற்போது 2381 கைதிகள் உள்ளனர்.

500 பேர் இருக்கக்கூடிய பெண்கள் சிறையில் 156 பேர் உள்ளனர். இவர்களில் 28 பேர் குண்டர் சட்டத்தில் கைதானவர்களாம்.

இது பற்றி சிறைதுறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, எப்போதும் இவ்வளவு பேர் சிறையில் இருப்பது வழக்கம் தான் என்று கூறினார்.

English summary
As 1346 have been booked and lodged in the prison, the Puzhal prison has no place for any Goondas!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X