மீண்டும் திமுகவுக்கு திரும்பும் ராதாரவி! "சித்தப்பா" கருணாநிதியை சந்திக்கப் போவதாக அறிவிப்பு!!
சசிகலா தலைமையை ஏற்காமல் அதிமுகவில் இருந்து ஒதுங்கியிருக்கும் ராதாரவி விரைவில் திமுகவுக்கு திரும்ப உள்ளதாக மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவில் இருந்து ஒதுங்கி இருக்கும் நடிகர் ராதாரவி மீண்டும் திமுகவுக்கு திரும்ப உள்ளார். விரைவில் தாம் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்திக்கப் போவதாகவும் ராதாரவி அறிவித்துள்ளார்.
திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார் நடிகர் ராதாரவி. பின்னர் அதிமுகவில் இணைந்த அவரை எம்.எல்.ஏ.வாக்கினார் ஜெயலலிதா.
2009-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து வெளியேறுவதாக ராதாரவி அறிவித்தார். பின்னர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். டெல்லியில் ராகுல் காந்தியையும் சந்தித்தார்.
ஆனால் திடீரென 2010-ம் ஆண்டு மீண்டும் அதிமுகவில் இணைந்தார் ராதாரவி. தற்போது ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் இருந்து ஒதுங்கியுள்ளார்.

ஸ்டாலினுடன் ஒரே மேடையில்
இந்த நிலையில் பழனியில் நடிகரும் திமுக நிர்வாகியுமான வாகை சந்திரசேகர் மகள் திருமணம் நடைபெற்றது. இத்திருமண விழாவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். இவ்விழாவில் பங்கேற்ற நடிகர் ராதாரவி பேசியதாவது:

விரைவில் நல்ல முடிவு
தற்போது நான் எந்த தலைமையையும் கொண்டவனாக இல்லை. விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன்.

கருணாநிதியை சந்திப்பேன்
எனது சித்தப்பாவாக கருதும் தி.மு.க. தலைவர் கருணாநிதி விரைவில் உடல் நலம் பெற்று குணமடைவார். அவரை சந்தித்து எனது முடிவை தெரிவிப்பேன்

ஸ்டாலினுக்கு முதல்வராகும் தகுதி
இங்கு பேசியவர்கள் அனைவரும் ஸ்டாலினை முதல்வராக வரவேண்டும் என்றார்கள். அதற்கான நேரம் வந்துவிட்டது. அதற்கான தகுதியும் ஸ்டாலினிடம் உள்ளது.

நேரம் வந்தால் வந்துவிடுவோம்
இப்போது நல்ல எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றுகிறார். சிலர் இங்க எப்ப வருவீங்க, வருவீங்க என கேட்கின்றனர். அதற்கான நேரம் வந்தால் வந்துவிடுவோம்.
இவ்வாறு ராதாரவி பேசினார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications