போட்டோவுக்கு போஸ் கொடுக்க பிரச்சனை உள்ள இடங்களுக்கு செல்கிறார் ராகுல்.. வெங்கய்யா நாயுடு பொளேர்!
போட்டோவுக்கு போஸ் கொடுக்கவே பிரச்சனை உள்ள இடங்களுக்கு ராகுல்காந்தி செல்கிறார் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
கோவை: போட்டோவுக்கு போஸ் கொடுக்கவே பிரச்சனை உள்ள இடங்களுக்கு ராகுல்காந்தி செல்கிறார் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். இருசக்கர வாகனத்தில் 3 பேருடன் ராகுல் காந்தி சென்றுள்ளார் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கடந்த 50 ஆண்டுகளாக ஆண்டவர்கள் விவசாயத்தை புறக்கணித்து விட்டனர்.
50,000 கோடி ரூபாய் பாசனத் திட்டத்தை மோடி அரசு தான் கொணடு வந்தது என்றும் அவர் கூறினர். . அதிகமான உற்பத்தியால் விலைவாசி குறைந்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறினார்.

தமிழக அரசை பாஜக இயக்கவில்லை
கடந்த 3 ஆண்டுகளில் மோடி அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். தமிழக அரசை பாஜக இயக்கவில்லை என்றும் அவர் ராகுல் காந்திக்கு பதிலளித்தார்.

அரசியலாக்க வேண்டாம்
மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் கவலை தெரிவித்தார். விவசாயிகள் பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம் என்றும் வெங்கய்யா நாயுடு கோரிக்கை விடுத்தார்.

சாலை விதிகளை மீறி
ராகுல் காந்தி சாலை விதிகளை மீறி 3 பேருடன் இரு சக்கரத்தில் பயணித்துள்ளார் என்றும் வெங்கய்யா நாயுடு குற்றம்சாட்டினார். போட்டோவுக்கு போஸ் கொடுப்பது தான் அவரின் வேலை என்றும் வெங்கய்யா நாயுடு ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார்.

ராகல்காந்தி கைது
மத்தியப்பிரதேச மாநிலம் மண்ட்சவூர் மாவட்டத்தில் போராட்டத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி நேற்று சென்றார். தடையை மீறி சென்ற அவரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

போட்டோவுக்கு போஸ்
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காகவே ராகுல் மண்டசவூர் மாவட்டத்திற்கு சென்றதாக அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications