வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென் தமிழகத்திலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், அந்தமான் ஒட்டிய மலேசிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதாக கூறினார்.

Rain Continues in South Tamil Nadu

இலங்கை அருகே நிலைபெற்றிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து விட்டது என்றும் அரபிக்கடலுக்கு காற்றழுத்த தாழ்வு நிலை சென்று விட்டது என்றும் வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் காலை முதல் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரமாக மழை பெய்து வருகிறது. தென் சென்னை பகுதிகளிம், புறநகர் பகுதிகளிலும் மழை விடாமல் பெய்வதால் பல பகுதிகளில் வெள்ளநீர் வடியாமல் உள்ளது.

இந்த நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களும், காவிரி டெல்டா மாவட்டங்களிலும் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும், நாகப்பட்டினத்திலும் அதிகபட்சமாக வடகிழக்குப் பருவமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The MET department Chennai said low pressure area and upper cyclonic circulation in the Arabian Sea are likely to bring more rains in South TamilNadu.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற