குளிர்ச்சி.. குளிர்ச்சி.. கூல்.. கூல்.. நாமக்கல்லில் இடியுடன் கனமழை… குஷியான பொதுமக்கள்
தமிழகத்தில் நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல்: தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் போது சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் படாதபாடுபட்டு வருகின்றனர்.
பகல் 9 மணிக்கே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் நடமாட்டம் கடுமையாக குறைந்துள்ளது. 10 மணிக்கு பின்னர் வெளியே யாரும் தலை காட்டுவதில்லை.

குளு குளு மழை
இந்நிலையில் இன்று நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கொல்லிமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

கூல்.. கூல்
மேலும், சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி உள்ளிட்டப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரியிலும் மழை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதேபோல் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

எங்கெல்லாம் மழை?
இதுதவிர, தருமபுரி, திண்டுக்கல் நத்தம், ஒக்கேனக்கல், தளி, பென்னாகரம், சத்தியமங்கலம், தேன்கனி கோட்டை, பவானிசாகர் ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.


Click it and Unblock the Notifications
