மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை கொட்டுமாம்!
மேலடுக்கு சுழற்சியால் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதுடன் அந்தந்த மாவட்ட மக்களை குளிர்வித்தது. ஆனால் சென்னையில் வழக்கம்போல் வெயில் வெளுத்து வாங்கி கொண்டுதான் இருக்கிறது.

ஈரோட்டில் கடந்த ஒருவாரமாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்றும் ஈரோட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன.
அதேபோல, கோவையில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மாநகர மற்றும் புறநகரப் பகுதிகளில் கன மழை பெய்ததால் குழுமையான சூழல் நிலவியது. காந்திபுரம், பீளமேடு, ராமாநாதபுரம், ஆர்.எஸ்.புறம் உள்ளிட்ட நகரப்பகுதிகளில் மட்டுமின்றி, கவுண்டம்பாளையம், துடியலூர், சூலூர் போன்ற புறநகரப் பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்தது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. அதே போல் தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதிகளில் மற்றொரு வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒர் இரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்புள்ளதாகவும், சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications