சில்லுன்னு காற்றுடன் சென்னையை சிலிர்க்க வைத்த ஜில் ஜில் மழை
சென்னையில் இன்று மாலை பல பகுதிகளில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Recommended Video

சென்னை: தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று மாலை மழை பெய்தது.
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சீக்கிரமாகவே துவங்கியது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களான தேனி, கோவை, நீலகிரியில் மழை பெய்து வருகிறது. அதேபோல, பல்வேறு மாவட்டங்கள் உட்பட கேரளா, கர்நாடகாவின் ஒரு சில பகுதிகள் என கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 26 வருடங்கள் கழித்து இடுக்கி அணை தற்போதுதான் நிரம்பியுள்ளது.

இந்நிலையில், 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தென்தமிழக பகுதிகளில் 35 முதல் 45 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த பலத்த காற்று 55 கிலோ மீட்டர் வரைகூட வீசும் என்றும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையில் மழை:
இந்த நிலையில் இன்று மாலை சென்னையில் மழை பெய்தது. மயிலாப்பூர், முகப்பேர், அண்ணா நகர், அம்பத்தூர், கிண்டி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பல புறநகர்ப் பகுதிகளிலும் கூட மழை பெய்தது.
ஆழ்வார்ப்பேட்டையிலும் மழை பெய்தது. ஆனால் அங்கு காவேரி மருத்துவமனை முன்பு கூடியுள்ள திமுகவினர் நனைந்தபடி தங்களது தலைவர் கருணாநிதிக்காக காத்துள்ளனர்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications