காலை முதல் விட்டுவிட்டு மழை.. சில் காற்று.. கடும் குளிர்: சென்னை சிட்டி முழுக்க ஊட்டி எஃபெக்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் மழை நிலவரம் எப்படி?...வீடியோ

  சென்னை: காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அத்துடன் கடும் குளிரும் நிலவி வருகிவதால் சென்னை நகர் ஊட்டி போல உள்ளது

  தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சூடுபிடித்துள்ளது. நேற்றிரவு முதல் சென்னையில் விடிய விடிய இடி மின்னலுடன் மழை கொட்டியது.

  இதனால் தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில் இன்று காலை முதல் விட்டு மழை பெய்து வருகிறது.

  பலத்த காற்று

  பலத்த காற்று

  பிற்பகலுக்குப் பிறகு பரவலாக தூறிக் கொண்டே இருக்கிறது. திடீர் திடீரென நல்ல மழையும் பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த காற்றும் வீசி வருகிறது.

  வீடுகளுக்குள் முடக்கம்

  வீடுகளுக்குள் முடக்கம்

  இதனால் நகர் முழுக்க கடுமையான குளிர் நிலவி வருகிறது. தொடர் மழை மற்றும் குளிரால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

  குளிரால் அவதி

  குளிரால் அவதி

  மழை மற்றும் குளிரால் இருச்சக்கர ஊர்தி ஓட்டிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கிறது.

  ஊட்டி எஃபெக்ட்

  ஊட்டி எஃபெக்ட்

  குளிர் மற்றும் சாரல் மழையால் சென்னை சிட்டி முழுவதும் ஊட்டி எஃபெக்ட்டில் உள்ளது. அடையாறு, கிண்டி, வளசரவாக்கம், வடபழனி தி நகர், அண்ணா நகர், அம்பத்தூர் என அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

  போக்குவரத்து நெரிசல்

  போக்குவரத்து நெரிசல்

  சென்னையில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்திருப்பதால் அலுவலகம் சென்றிருப்பவர்கள் முன்கூட்டியே வீடு திரும்பி வருகின்றனர். இதனால் சென்னை அண்ணசாலை, வடபழனி, அண்ணாநகர் உட்பட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஆரம்பித்துவிட்டது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rains in Chennai city fully from morning. This makes the entire city cooler.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற