“விஜய பிரபாகரன் தோல்விக்கு இதுதான் காரணம்".. உடைத்துப் பேசிய ராஜேந்திர பாலாஜி!
விருதுநகர்: "லோக்சபா தேர்தலில் சிவகாசி வடக்கு ஒன்றிய பகுதியில் வாக்காளர்களுக்கு வாகன வசதிகளை நாம் செய்துகொடுக்காமல் விட்டதால் சுமார் 7 ஆயிரம் வாக்குகள் பதிவாகாமல் போனது. தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனின் தோல்விக்கு இதுதான் காரணம். அப்போது நாம் வெற்றியை கோட்டைவிட்டுட்டோம்." என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக உடன் தேமுதிக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. அப்போது விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில், தேமுதிகவின் விஜய பிரபாகரன் போட்டியிட்டு, சுமார் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்நிலையில், அவரது தோல்விக்கு காரணம் என உடைத்துப் பேசியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக வடக்கு ஒன்றிய வாக்குச்சாவடி பாக முகவர்களுக்கான பயிற்சி கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "விருதுநகர் நாடாளுமன்ற தேர்தலில் சிவகாசி வடக்கு ஒன்றிய பகுதியில் வெகு தொலைவில் இருந்த வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட பகுதியில் வாக்காளர்களுக்கு வாகன வசதியை நாம் செய்து கொடுக்காமல் விட்டதால் சுமார் 7,000 வாக்குகள் பதிவாகாமல் போனதே விஜய பிரபாகரனின் தோல்விக்கு காரணம்.
7 ஆயிரம் வாக்குகள் பதிவாகியிருந்தால் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பார். வெற்றியை கோட்டை விட்டு விட்டோம். வெற்றியை எங்கு தவற விட்டோம் என கண்காணிக்கும்போது எனது கண்ணுக்கு வெளிச்சமாக தெரிந்தது. வடக்கு ஒன்றியத்தில் நமக்கு கிடைக்க வேண்டிய 7 ஆயிரம் வாக்குகள் பதிவாகாதது என்பது தெரியவந்தது.
மேலும், 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற மமதையில் இருந்துவிட்டோம். அதுபோல் எப்போதும் இருக்கக்கூடாது என்பதற்கு கடந்த நாடாளுமன்ற தேர்தல் நமக்கு ஒரு படிப்பினை. கவனமாக இருந்திருந்தால் விஜய பிரபாகரன் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றிருப்பார். அவரை அனுப்பி வைத்த பெருமையை நாம் பெற்றிருப்போம். வரும் சட்டமன்ற தேர்தலில் கவனமாக செயல்பட வேண்டும்." என்றார்.
மேலும் பேசிய ராஜேந்திர பாலாஜி, "கள்ள ஓட்டு, போலி வாக்காளர்களை களைவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவை எடப்பாடி வரவேற்றுள்ளார். அதிமுகவுக்கு யாரை கண்டும் பயம் கிடையாது. மக்களுக்கு பயப்படுவோம். வேறு எந்த கொம்பனுக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம். எடப்பாடியை ஏமாற்றலாம், கழற்றி விடலாம், ஒழித்து விடலாம் என்று சில சதிகாரர்கள் சூழ்ச்சி செய்தனர்.
அந்த சதி, சூழ்ச்சிகளை எல்லாம் அடித்து நொறுக்கி முழு பவுர்ணமி நிலவாக ஒளிர்கிறார் எடப்பாடி. அதிமுக தேச பக்தி உள்ள இயக்கம். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பாஜவுடன் எடப்பாடி, கூட்டணி வைத்துள்ளார். பாஜவோடு தேச தெய்வீக பக்தன் எடப்பாடி கூட்டணி வைத்ததில் எந்தத் தவறும் இல்லை. இந்த கூட்டணி ஆன்மீக பலம் பொருந்தியது. மத்தியஅரசுக்கு யார் அடிமை. எப்போது எதிர்க்க வேண்டுமோ? அதை தயங்காமல் எதிர்க்கக் கூடியவர் எடப்பாடி பழனிசாமி." எனப் பேசியுள்ளார்.
மேலும், " கடந்த தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் தோல்வியடைந்தாலும், அப்பகுதி மக்களின் மனதில் எப்போது அதிமுகவுக்கு இடம் உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதியிலும் அதிமுக கூட்டணிதான் வெற்றி பெறும். திமுக தோல்வி முகத்தோடு கோட்டையை விட்டு வெளியேறும். அதிமுக வெற்றி முகத்தோடு கோட்டையை நோக்கி செல்லும். அதற்கான காலம் வந்து கொண்டிருக்கிறது." எனக் கூறியுள்ளார் ராஜேந்திர பாலாஜி.
-
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications