"ஒன்னு நாலாகட்டும்"... வேட்புமனுவைக் கொடுக்காமல் தேர்தல் அதிகாரியைக் குழப்பிய ராஜேந்திர பாலாஜி!
விருதுநகர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது மனுவை அளிக்காமல் ஒன்னு நாலாகட்டும் என்று மீண்டும் மீண்டும் கூறியது தேர்தல் அதிகாரியை குழப்பம் அடைய வைத்தது.
சட்டசபை தேர்தலில் சிவகாசி தொகுதியில் அதிமுக சார்பில் செய்தித் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி போட்டியிடுகிறார். இந்நிலையில் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வியாழக்கிழமை மதியம் 12.50 மணி முதல் 1.20 மணிக்குள் வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து ராஜேந்திர பாலாஜி மதியம் 12.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியின் அறைக்குள் நுழைந்தார். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து அவர் தனது வேட்புமனுவை சரி பார்த்தார்.
அவர் வேட்புமனுவை சரிபார்த்த பிறகு அதை தன்னிடம் அளிக்குமாறு தேர்தல் அதிகாரி கேட்டார். அதற்கு அமைச்சரோ மனுவை அளிக்காமல் அமர்திருந்தார். தேர்தல் அதிகாரி மனுவை அளிக்குமாறு மீண்டும் மீண்டும் கேட்க அமைச்சரோ ஒன்னு நாலாகட்டும் என்று கூறினார்.
வட மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமர் குஸ்வாஹாவுக்கு தமிழ் சரியாகத் தெரியாது. இதனால் அவர் மீண்டும் மனுவை கேட்க அமைச்சர் மீண்டும் ஒன்னு நாலாகட்டும் என்று கூறினார்.
இறுதியில் 1.04 மணிக்கு தான் அமைச்சர் மனுவை அளித்தார். அவர் அங்கிருந்து சென்ற பிறகு குஸ்வாஹா சக அதிகாரிகளிடம் ஒன்னு நாலுக்கு விளக்கம் கேட்டறிந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications