ரஜினி அரசியலுக்கு வந்தாலும் சிஸ்டத்தை மாற்ற முடியாது.. நக்கீரன் கருத்துக் கணிப்பில் மக்கள் பொளேர்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும் சிஸ்டத்தை மாற்ற முடியாது என்று பெரும்பான்மையான மக்கள் தெரிவித்துள்ளனர். நக்கீரன் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
நக்கீரன் இதழ், ரஜினிகாந்த் அசியல் பிரவேசம் செய்தால் மக்களிடம் எப்படி வரவேற்பு இருக்கும் என்பது குறித்து ஒரு சர்வே நடத்தியுள்ளது. கடந்த 3, 4, 5 ஆகிய மூன்று தேதிகளில், தமிழகத்தின் பல பகுதிகளில் மொத்தம் பத்தாயிரம் பேரை சந்தித்து இந்த கருத்துக் கணிப்பை எடுத்துள்ளதாக நக்கீரன் தெரிவித்துள்ளது.
அதில் ரஜினி தனது ரசிகர்களுடனான சந்திப்பின்போது, பேச்சின்போது குறிப்பிட்ட சிஸ்டம் கெட்டுவிட்டது என்ற வார்த்தை ஒரு கேள்வியாக முன் வைக்கப்பட்டுள்ளது.

சிஸ்டத்தை மாற்ற முடியுமா
"சினிமாவில் ரஜினி செய்வது போல, நிஜத்திலும் ரஜினியால் அரசியல் சிஸ்டம் மாறுமா? "சிஸ்டம் கெட்டுப் போச்சு எனச் சொல்லும் ரஜினி அதை மாற்றுவாரா?' என நக்கீரன் இதழ் சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு, "ரஜினி சொன்னது மாதிரி அரசியல் சிஸ்டத்தை மாற்றுவார்' என 25 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினியால் முடியாது
ஆனால், 33 சதவிகிதம் பேர் அது பற்றி தெரியாது, என கூறியுள்ளனர். "ரஜினியால் சிஸ்டம் மாறாது' என 42 சதவிகிதம் பேர் உறுதிபட தெரிவித்துள்ளனராம். அதாவது, ரஜினி இந்த சிஸ்டத்தை மாற்றிவிடுவார் என நினைப்போரை விட அவரால் முடியாது என நினைப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கருத்து கூற மறுப்போரும், ரஜினி மீது இன்னும் முழு நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற கணக்கின்கீழ் பார்க்கப்பட வேண்டியவர்கள்.

எதுவானாலும் ஓகே
ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து தனியாக போட்டியிட வேண்டுமா? அல்லது மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டுமா?'என்கிற கேள்விக்கு, அவர் எந்த முடிவெடுத்தாலும் சரி என 39 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்தனர்.

தனித்து ஜெயிப்பார்
38 சதவிகிதம் பேர் "ரஜினி தனித்து நின்றாலும் வெற்றி பெறுவார்' என தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ரஜினி மீது அவ்வளவு நம்பிக்கை அந்த மக்களுக்கு.
-
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications