ரஜினி பற்றிய பேச்சுக்கு கண்டனம்: விஜயகாந்த் கொடும்பாவியை எரித்த ரஜினி ரசிகர்கள்
சென்னை: ரஜினிகாந்த் பின்வாங்கியதைப் போல், நான் ஒருபோதும் பின் வாங்க மாட்டேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஜினி ரசிகர்கள், சென்னை கொடுங்கையூரில் விஜயகாந்தின் கொடும்பாவியை எரித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வில்லிவாக்கத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், தமிழகத்தில் தி.மு.க. 5 தடவையும், அ.தி.மு.க. 3 தடவையும் மாறி, மாறி ஆட்சி செய்து குட்டி சுவராக்கி விட்டார்கள். மழை வந்தபோது நாம் எவ்வளவு கஷ்டப்பட்டோம். நீங்கள் திரும்ப, திரும்ப அவர்களுக்கு வாக்களித்தால் அதே கதி தான் ஏற்படும் என்று கூறினார்.

சட்டசபைக்கு நான் வரக்கூடாது என்று வெறுப்பேற்றினார்கள். சட்டசபைக்கு வராதவர் எல்லாம் எதிர்க்கட்சி தலைவரா? என்கிறார்கள். நான் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் ‘பியூஸ் போன பல்பு' போலத்தான் இருக்கிறேன். ஏமாற்ற பிறந்தவர்கள் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும். நாமெல்லாம் ஏமாறுவதற்காக பிறந்தவர்கள் என்றார் விஜயகாந்த்.
அடுத்து என்ன நினைத்தாரோ திடீரென டாபிக் மாறினார். ரஜினி நடித்த திரைப்படம் ஒன்றில் சில காட்சிகளை வெட்டி எடுக்கசொல்லி மிரட்டல் விடுக்கப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த் பணிந்து பின் வாங்கினார்.
ஆனால், அதேபோன்று, பாமக தலைவர் ராமதாசால் தனக்கு மிரட்டல் வந்தபோது தான் பின்வாங்கவில்லை. எந்த ஒரு விஷயத்திலும் தான் பின்வாங்கியதில்லை. நல்ல உள்ளம் படைத்தவர் ரஜினிகாந்த். அவரை நாம கூட்டிகிட்டு வரலாம், ஆனால், தேவையில்லாத சண்டை எதுக்கு என்று அவர் நினைக்கிறார்" என்று ஒருவழியாக பேசி பிரச்சாரத்தை முடித்தார்.
விஜயகாந்தின் பேச்சு ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜயகாந்த் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த ரஜினி ரசிகர்கள் அவரது கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications