ஆன்மீக அரசியல் என்பது தமிழக மக்கள் காதில் பூ சுற்றும் செயல்... இயக்குநர் கவுதமன் காட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினியின் ஆன்மீக அரசியல் என்பது தமிழக மக்களின் காதில் பூ சுற்றும் செயல் என இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் ரஜினியின் வருகைக்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது.

ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு இயக்குநர் கவுதமன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவது தமிழக மக்களை முட்டாளுக்கும் செயல் என அவர் தெரிவித்துள்ளார்.

காதில் பூ சுற்றும் செயல்

காதில் பூ சுற்றும் செயல்

ரஜினி அரசியல் அறிவிப்பு தமிழக மக்களின் காதில் பூ சுற்றும் செயல் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் எங்களுக்காக எங்கள் மண்ணில் உருவான ஆன்மீகவாதி வள்ளலார் என்றும் சாதி மதம் இருக்கக்கூடாது என்றவர் வள்ளலாளர் என்றும் கவுதமன் தெரிவித்தார்.

எப்படி போராடுவார்?

எப்படி போராடுவார்?

மேலும் ரஜினியை நீங்கள் எங்கள் மண்ணை சேர்ந்தவர் இல்லை என்றும் பாபா எங்களின் கடவுள் இல்லை என்றும் அவர் கூறினார். தமிழ் மண்ணுக்கு சம்பந்தம் இல்லாத ரஜினி எப்படி தமிழ் மக்களுக்காக போராடுவார் என்றும் அவர் கூறினார்.

மோடியிடம் உதவி கேட்கவில்லை

மோடியிடம் உதவி கேட்கவில்லை

விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட போது ரஜினி வாய்திறக்கவில்லை என்றும் ஓகி புயலால் மீனவர்கள் பாதிக்கப்பட்டபோது தனது நண்பர் பிரதமர் மோடியிடம் பேசி ரஜினி உதவிகேட்வில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மோடியிடம் பேச வேண்டியதுதானே

மோடியிடம் பேச வேண்டியதுதானே

மேலும் தனது நண்பரான பிரதமர் மோடியிடம் பேசி காவிரி மோலாண்மை வாரியம் அமைக்க கூற வேண்டியதுதானே என்றும் கவுதமன் கேள்வி எழுப்பினார்.

ரஜினி போர் பிரகடனம்

ரஜினி போர் பிரகடனம்

ரஜினியை பின்னால் இருந்து இயக்குவது பாஜகதான் என்றும் கவுதமன் குற்றம்சாட்டினார். ரஜினி தமிழக மக்கள் மீது போர் பிரகடனம் செய்துள்ளாரர் என்றும் கவுதமன் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Director Gauthaman opposing Rajinikanth political arrival. He says Rajini foolishing TamilNadu people.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற