இன்று செய்தியாளர்களுடன் ரஜினியின் சந்திப்பு எதுவுமில்லை!
நடிகர் ரஜினி காந்த் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை ரஜினியின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.
சென்னை: நடிகர் ரஜினி காந்த் இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அப்படியெல்லாம் அவர் சந்திக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் ரசிகர்களை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார். அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் போர் வரும் பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

இதிலிருந்து அவரது அரசியல் பிரவேசம் உறுதியானது. இந்நிலையில் தமிழகத்தை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் கருத்து எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ரஜினி வரும் ஜூலை மாதம் தனிக்கட்சி தொடங்குவார் என்று அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் அறிவித்திருந்த நிலையில் அவர் பல்டி அடித்தார். இந்த நிலையில் ரஜினி காந்த் இன்று போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Update: Rajinikanth's PRO denies reports of any presser called by the Superstar
— Arvind Gunasekar (@arvindgunasekar) May 27, 2017
இந்தத் தகவல் காட்டுத் தீ போல பரப்பப்பட்டதால் எங்கே அவர் கட்சி தொடங்கப் போகும் செய்தியை வெளியிடப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. ஆனால் அப்படியெல்லாம் எந்த சந்திப்புக்கும் திட்டம் இல்லை என்று அவரது செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications