அரசியலுக்கு வரலைனு சொல்லல கண்ணா!.. ரசிகர்களை சமாதானப்படுத்திய ரஜினி #RajiniFansMeet

Posted By:
Subscribe to Oneindia Tamil
31ம் தேதி சஸ்பென்ஸ் உடைக்கப்போகும் ரஜினி!- வீடியோ

சென்னை: அரசியலுக்கு நான் வரமாட்டேன் என்று சொல்லவில்லையே எனது நிலைப்பாட்டை 31-ஆம் தேதி அறிவிக்கிறேன் என்றுதானே சொன்னேன் என்று ரசிகர்களை ரஜினி சமாதானப்படுத்தினார்.

காலா படப்பிடிப்பில் இத்தனை நாட்களாக மிகவும் பிசியாக இருந்த ரஜினிகாந்த் தனது ரசிகர்களை அக்டோபர் மாதம் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்புகளால் இந்த திட்டம் தாமதாமானது.

Rajinikanth convinced his fans relating to his political entry

இந்நிலையில் இன்று 2-ஆவது முறையாக ரஜினி ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரஜினி பேசுகையில், நான் அரசியலுக்கு வருவேனா, வரமாட்டேனா என்பது குறித்து பத்திரிகைகள் மிகவும் ஆவலுடன் உள்ளன. போர் வந்தா வருவேனு சொன்னேன். போர் வந்துவிட்டதா.

அரசியலுக்கு வீரம் மட்டும் போதாது. யூகமும் வேண்டும். வரும் 31-ஆம் தேதி என்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து நான் அறிவிப்பேன் என்றார்.

அப்போது ரசிகர்கள் எப்போ தலைவா வருவீங்க என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். உடனே ரஜினி நான் அரசியலுக்கு வரமாட்டேன்னு சொல்லலையே, வரும் 31-ஆம் தேதி என்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேனுதானே சொன்னேன் என்று சமாதானப்படுத்தினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajinikanth says that he will say his stand about politics on Dec.31. At that time he convinced his fans and says that i am not saying i wont come to politics.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற