இமயமலையில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.. ஆன்மீக பயணம் சிறப்பாக இருந்ததாக பேட்டி
Recommended Video

சென்னை: ஆன்மீக பயணத்தை நிறைவு செய்துவிட்டு, இமயமலையில் இருந்து சென்னை திரும்பியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
ஆன்மீகத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட நடிகர் ரஜினிகாந்த், கடந்த 10ம் தேதி ஆன்மீக யாத்திரையாக இமயமலை புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி லதாவும் சென்றார். பெண்கள் பாதுகாப்பு குறித்த நிருபர்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் அவர் கிளம்பி சென்றது சர்ச்சையை கிளப்பியிருந்தது.

இந்த நிலையில், முதலில் இமாசலப்பிரதேசம் சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள சாமியாரை சந்தித்தார். பின்னர் ரிஷிகேஷ் சென்று தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் சாமியாரிடம் ஆசி பெற்ற ரஜினிகாந்த், இமயமலை சென்று அங்குள்ள பாபா குகையில் தியானம் செய்தார்.
பின்னர், அங்குள்ள பிரசித்திபெற்ற கோயில்களுக்கு சென்று வழிபட்டார். இதைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு அவர் டெல்லியில், கிளம்பி மதியம் சுமார் 2 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கு நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த, ரஜினிகாந்த், ஆன்மிக பயணம் சிறப்பாக இருந்ததாக தெரிவித்தார். 15 நாட்கள் ஆன்மீக பயணம் மேற்கொள்வார் என கூறப்பட்ட நிலையில், 10 நாட்களில் ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார்.
அரசியலுக்கு வர உள்ளதாக அறிவித்த ரஜினிகாந்த், தனது ஆன்மீக பயணத்தின்போது, அரசியல் வெற்றிக்காக கோயில்களில் வழிபாடு நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இனிமேல் அரசியல் காய் நகர்த்தல்கள் வேகம் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் உள்ளது.
-
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications