நான் எப்போ வருவேன்,எப்படி வருவேன்னு தெரியாது, வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்.. நிரூபித்த ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன் என்ற ரஜினி பட வசனம் இன்று அவரது அறிவிப்பு மூலம் பொருத்தமாயிற்று.

ரஜினி அரசியலுக்கு வரமாட்டார், அவருக்கு ஒத்து வராது. அவர் கோழை என்றெல்லாம் விவாதங்கள் நடைபெற்றன. தமிழர்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்றெல்லாம் புதிய விதிகளை வகுத்தனர்.

இன்னும் சிலர் இது வழக்கம் போல் படத்தை பிரமோஷன் செய்வதற்காக ரஜினி இப்படி ஸ்டென்ட் அடிக்கிறார் என்றார்கள். ரஜினி தமிழகத்துக்கு என்ன செய்தார் என்ற கேள்விகளும் ரவுண்ட் கட்டின.

ரசிகர்கள் மத்தியில் பேச்சு

ரசிகர்கள் மத்தியில் பேச்சு

ரஜினி இரண்டாவது முறையாக ரசிகர்களை சந்தித்தார். அப்போது முதல் நாளான 26-ஆம் தேதி, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி அறிவிப்பதாக கூறியிருந்தார். இதையடுத்து இன்று ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

தனிக் கட்சி

தனிக் கட்சி

ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசுகையில், அரசியலுக்கு வருவது உறுதி என்றும், தனிக்கட்சி தொடங்குவது உறுதி என்று ரஜினி அறிவித்தார். மேலும் நாட்டில் சிஸ்டம் கெட்டு போய்விட்டது. நம்மை பார்த்து மற்றவர்கள் சிரிக்கிறார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

நல்ல முடிவு

நல்ல முடிவு

68 வயதுக்கு மேல் அரசியலுக்கு வந்து ரஜினி என்ன செய்ய போகிறார் என்ற கேள்வியும் எழுந்தது. காலம் கடந்து எடுக்கப்பட்டாலும் இன்று எடுக்கப்பட்டது நல்ல முடிவாகவே ரசிகர்கள் கருதுகின்றனர்.

ரஜினி பஞ்ச்கள்

ரஜினி பஞ்ச்கள்

ரஜினிகாந்தின் பஞ்ச் டயலாக்குகள் மிகவும் பிரபலம். அந்த வகையில் முத்து படத்தில் வரும் பிரபல வசனமான நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன் என்பார். அதுபோல் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன் என்கிற பஞ்ச்சும் ரஜினிக்கு பொருத்தமானதாகவே உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajinikanth today announced his political entry and he also proved his famous Muthu film dialogue, Naan Eppo varuven Eppadi varuvenu theriyathu, aana vara vendiya nerathukku correcta varuven.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற