சரியான நேரத்தில், சரியான முடிவெடுப்பேன்...அரசியல் குறித்து ரஜினியின் இன்றைய பஞ்ச்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியலில் தாம் நுழைவது குறித்து சரியான நேரத்தில் முடிவெடுத்து அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 9 வருடங்களுக்குப் பிறகு மே15ம் தேதி முதல் மே 19 தேதி வரை சென்னை கோடம்பாக்கத்திலுள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்து வருகிறார்.

 Rajinikanth told that at right time he will decide about politics

முதல் நாளில் கருப்பு நிற ஆடையில் வந்து ரசிகர்களிடையே அரசியலுக்கு தான் வரமோட்டேன் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள் என்று தனது அரசியல் பிரவேச சர்ச்சைகளுக்கு பதிலளித்தார். இதனால் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ரசிகர்களின் தாகம் அதிகரித்துள்ளது.

இரண்டாம் நாளான நேற்று வெள்ளை ஆடையில் வந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மூன்றாம் நாளான இன்று விழுப்புரம், சிவகங்கை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினி செய்தியாளர்களிடம் பேசிய போது "அரசியல் குறித்து இரண்டு நாட்களுக்கு முன்னர் கூறிய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை, சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்பேன்" என்றும் கூறியுள்ளார். தன்னை சந்திக்காத விரக்தியில் இருக்கும் ரசிகர்கள் சிலர் தீக்குளிக்க உள்ளதாக தெரிவித்தது குறித்து பதிலளித்த ரஜினி விடுபட்ட ரசிகர்களுடன் அடுத்தகட்டமாக புகைப்படம் எடுத்துக் கொள்ள உள்ளதாக கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajinikanth says that at right time he will decide about the political entry in his life time.
Please Wait while comments are loading...