சென்னையில் ராஜீவ் காந்தி சிலைகள் சேதம்: காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
சென்னை: சென்னையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தமிழகத்தில் ராஜீவ் காந்தியின் சிலையை விஷமிகள் சேதப்படுத்தினர். சிலையில் உள்ள தலையை மட்டும் துண்டாக எடுத்தனர். இந்நிலையில் ராஜீவ் காந்தியின் சிலைகள் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள பட்டாளம், வேப்பேரியில் ராஜீவ் காந்தியின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதை பார்த்த காங்கிரஸார் பட்டாளம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிலையை உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள ராஜீவ் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.
ராஜீவ் சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீசார் வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications