For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக பா.ஜ.க குழு டெல்லி சென்றது: நாளை தொகுதி பங்கீடு வெளியாகிறது

By Mayura Akilan
|

சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டு உத்தேசப் பட்டியலோடு இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர். நாளை ராஜ்நாத்சிங் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

Rajnath to officially announce seat sharing deal in TN tomorrow

பாஜகவின், நிர்வாகக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு மற்றும் பாரதிய ஜனதாவின் தமிழக வேட்பாளர்கள் குறித்து விவாதிக்கப்பட்டு உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இந்நிலையில், அக்கட்சியின் தமிழக பாரதிய கட்சியின் தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவ், தமிழக தலைவர் பொன். ராதா கிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் இந்த பட்டியலை கட்சி மேலிடத்தில் அளிக்க சென்றுள்ளனர்.

அந்த பட்டியல் இறுதி செய்யப்பட்ட பின்னர், நாளை சென்னை வரும் ராஜ்நாத் சிங், அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணியிலுள்ள தமிழக கட்சிகளின் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாவது உறுதியாகி உள்ளது.

English summary
Bharatiya Janata Party (BJP's) National President Rajnath Singh to visit Chennai on Thursday to officially announce Party's seat sharing deal, for the upcoming Lok Sabha election, with its alliance partners in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X