ரஜினியின் அண்ணன் மனைவி மாரடைப்பால் காலமானார்
நடிகர் ரஜினியின் அண்ணி மாரடைப்பால் காலமானார்
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணன் மனைவி இன்று காலமானார். இதையடுத்து ரஜினிகாந்த் உடனடியாக பெங்களூருக்கு விரைந்துள்ளார்.
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர் ரஜினி. அதனால் அவரை தன் உடன் பிறந்த அண்ணன் சத்தியநாயாராணராவும், அவரது மனைவி கலாவதிபாயும்தான் பெற்ற பிள்ளையை போல வளர்த்தனர். ரஜினி பெங்களூருவில் இருந்தபோதும் சரி, சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தபோதும் சரி இவர்கள் இருவரும்தான் உறுதுணையாக இருந்து தாங்கி பிடித்தவர்கள்.

மதிப்பளிக்கும் ரஜினி
தான் எவ்வளவு பெரிய ஸ்டாராக வளர்ந்தாலும், இவர்கள் இருவரின் கருத்துக்கள், ஆலோசனைகளை ரஜினி பெறுவது வழக்கம். இந்த பழக்கம் அன்றிலிருந்து இன்றுவரை நீடிக்கிறது. அத்தகைய ஆலோசனைகள் சினிமாவாகட்டும், குடும்ப நிகழ்வுகளாகட்டும், எல்லாவற்றையுமே இவர்கள் இருவரிடம் ரஜினி பகிர்ந்து கொண்டு அவர்களின் கருத்துக்களுக்கும், வார்த்தைகளுக்கும் மதிப்பளிப்பார்.

தீவிர சிகிச்சை
இந்நிலையில் அண்ணி கலாவதிபாய்க்கு கடந்த சில காலங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு போன்ற கோளாறுகளால் பாதிக்கப்பட்டார். இதற்காக பெங்களூரிவிலேயே ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையும் எடுத்து கொண்டார்.

பெங்ளூருவில் ரஜினி
ஆனாலும் கலாவதிபாய்க்கு நேற்றிரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதனால் இரவு 11.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

பெங்களூருவில் ரஜினி
அண்ணி இறந்த தகவல் கேட்டு ரஜினி மிகவும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார். இதனால் உடனடியாக பெங்களுருக்கு இன்று காலை புறப்பட்டு சென்றார். கலாவதிபாய்க்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கலாவதிபாயின் இறுதிசடங்கு இன்று மாலை நடக்கும் என தெரிகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications