அலங்காநல்லூர் அதிர ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி பிரமாண்ட பேரணி: அமீர், ஹிப்ஹாப் தமிழா பங்கேற்பு!
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி அலங்காநல்லூரில் பிரமாண்ட பேரணி நடைபெறுகிறது. இதில் திரைப்பட இயக்குநர் அமீர், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி, ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை: ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி அலங்காநல்லூரில் பிரமாண்ட பேரணி நடைபெறுகிறது. இதில் திரைப்பட இயக்குநர் அமீர், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா, ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் இந்த ஆண்டும் தடைவிதித்துள்ளது. இதனைக் கண்டித்து கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று மதுரை அலங்காநல்லூரில் அறிவித்தப்படி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கு 2000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
தடையை மீறி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்களையும் அவர்கள் தடுக்க முயன்றனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி ஜல்லிக்கட்டுப் பேரவை தலைவர் ராஜசேகர், இயக்குநர் அமீர், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஆகியோர் தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்று வருகிறது.
இதில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டுள்ளனர். கூட்டம் அளவுக்கு அதிகமாக திரள்வதால் அலங்காநல்லூரில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பும் பன்மடங்கு பலப்பபடுத்தப்பட்டு போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications