ராணிப்பேட்டை ரசாயன ஆலை விபத்தில் பணியாளர் படுகாயம்! இழப்பீடு தர ராமதாஸ் வலியுறுத்தல்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை வேதி ஆலை விபத்தில் பணியாளர் படுகாயமடைந்த நிலையில் அந்த நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: இராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் எஸ் -3 என்ற வேதிப்பொருள் ஆலையில் வேதிப்பொருள் கொள்கலனை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட பயங்கர விபத்தில் கடலூர் மாவட்டம் தியாகவள்ளியைச் சேர்ந்த பிரவீண் குமார் என்ற தொழிலாளி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.

இந்த விபத்துக்கும், பிரவீன் குமாருக்கு ஏற்பட்ட காயங்களுக்கும் நிர்வாகத்தின் அலட்சியமும், போதுமான பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததும் தான் காரணமாகும். விபத்தால் முடங்கிப் போன தொழிலாளி இனி வாழ்வாதாரம் ஈட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். ஆனால், பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு வேதி ஆலை நிறுவனம் எந்த உதவியும் செய்யவில்லை.
இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் மீதும், அதன் நிர்வாகிகள் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து உரிய இழப்பீடு பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications