அதிமுக வக்கீல்களை டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினராகப் போடுவதா.. ராமதாஸ் கடும் பாய்ச்சல்
சென்னை: அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தில் உறுப்பினர்களாக நியமித்ததன் மூலம், அரசு அமைப்பானது அதிமுகவின் துணை அமைப்பாக மாற்றப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில்(டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் தேர்வாணையத்தில் 10 உறுப்பினர்களின் இடம் காலியாக இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய முன்னாள் தலைவரும், உறுப்பினருமான பாலசுப்பிரமணியன் நேற்று ஓய்வு பெற்றார்
அதனைத் தொடர்ந்து ஆளுநர் ரோசய்யா உத்தரவின்படி, தேர்வாணையத்திற்கு 11 புதிய உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.
ஆனால், அவர்கள் அனைவரும் அதிமுகவின் தீவிர உறுப்பினர்கள். இதனால், டிஎன்பிஎஸ்சி அதிமுகவின் துணை அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

அதிமுகவின் துணை அமைப்பு...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக இருந்த இடங்களை நிரப்பும் நோக்குடன் 11 புதிய உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்திருக்கிறது. அவர்கள் அனைவரும் தீவிர அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆவர். அரசு ஊழியர்களை தேர்ந்தெடுத்து நியமிப்பதற்கான அரசியல் சட்ட அதிகாரம் கொண்ட ஆணையத்தை அ.தி.மு.க.வின் துணை அமைப்பாக மாற்றும் முயற்சிகள் கண்டிக்கத் தக்கவை.

தார்மீகத் தகுதி இல்லை...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தலைவரும், 14 உறுப்பினர்களும் இருக்க வேண்டும். 11 உறுப்பினர் பணியிடங்கள் காலியாக இருந்ததையடுத்து அவற்றை நிரப்புவதற்காக 11 பேரை அரசு நியமித்துள்ளது. அவர்களில் இ.ஆ.ப. அதிகாரி இராஜாராம் உள்ளிட்ட நால்வர் தவிர மீதமுள்ள 7 பேரும் ஆளுங்கட்சி வழக்கறிஞர் அணியைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்ற சட்டப்பூர்வ ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்படும் தார்மீக தகுதி அவர்களுக்கு இல்லை.

ராஜாராமின் சாதனை...
புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இ.ஆ.ப. அதிகாரியான தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளரான மு. இராஜாராம் கரை வேட்டி கட்டாத அ.தி.மு.க. உறுப்பினராவார். செய்தித்துறை செயலர் என்ற முறையில், ஊடக நிர்வாகங்களை கெஞ்சியும், சில நேரங்களில் மிஞ்சியும் ஊடகங்களில் அரசுக்கு எதிரான செய்திகள் வராமல் பார்த்துக் கொண்டது தான் இவரது சாதனை.

ஊழல் ஆணையம்...
இப்படியாக பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டு அ.தி.மு.க. துணை அமைப்பாக மாற்றப்பட்டிருக்கிறது. தகுதியும் நேர்மையும் இல்லாமல் விசுவாசத்தின் அடிப்படையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதால் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் ஊழல் ஆணையமாக மாறி வருகிறது.

ரத்து செய்யவேண்டும்...
லஞ்சம் கொடுத்து பணியில் சேர்பவர்களின் முதன்மை நோக்கம் லஞ்சம் வாங்குவதாகத் தான் இருக்கும் என்பதால் அரசு நிர்வாகத்தில் ஊழல் தலைவிரித்தாடும். எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 11 புதிய உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இப்பதவிக்கு தகுதியான ஆட்களை பரிந்துரை செய்வதற்காக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் அப்பழுக்கற்ற வரலாறு கொண்ட சமூக ஆர்வலர்களைக் கொண்ட தேர்வுக் குழுவை அமைக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
-
பெண்களின் திருமண வயது 21 ஆகும்.. மகளிர் அனைவருக்கு மாதம் ரூ.2000! ஆஃபர்களை அள்ளி வீசிய அன்புமணி! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications