தமிழக அரசின் ஆலோசகர் ஆனார் டி.ஜி.பி. ராமானுஜம்
சென்னை: சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யாக பணியாற்றி ஓய்வு பெறும், ராமானுஜத்திற்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழக அரசின் ஆலோசகர் என்ற புதிய தற்காலிக பதவி உருவாக்கப்பட்டு அதில், ராமானுஜம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்புகளை, தமிழக தலைமைச் செயலர், மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்டுள்ளார்.
ஷீலா பாலகிருஷ்ணன்
தலைமைச் செயலாளராக பணியாற்றிய ஷீலா பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்ற பிறகு, முதல்வரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதன்பின் முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் மற்றொரு செயலாளர் வெங்கட்ராமனுக்கும் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
பதவி நீட்டிப்பு
தற்போது ஓய்வு பெற்ற ராமானுஜம், ஏற்கனவே சட்டம் ஒழுங்குப் பணியில் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டார். தற்போது, அவர் ஆலோசகராக ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் ஆலோசகர்
ஆனால் முதல்வர் அலுவலக ஆலோசகர் என்று பதவியில் குறிப்பிடப்படாததால், அவர் தொடர்ந்து டிஜிபி அலுவலகத்தில் இருந்தபடியே போலீசுக்கான ஆலோசகராக இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்தப் பதவியில் நியமிக்கப்படும் முதல் நபர், ராமானுஜம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
டி.ஜி.பி. நடராஜ்
முன்னாள் டி.ஜி.பி நட்ராஜ் பணி ஓய்வுக்குப் பின்னர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தது நினைவிருக்கலாம்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications