தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை படை தாக்குதல் – கொந்தளிப்பில் கிராமங்கள்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமேஸ்வரத்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் சுமார் 600 படகுகளில் நேற்று மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டு இருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்துள்ளனர்.

மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டல்களை கொண்டும் அவர் தாக்குதல் நடத்தியதோடு ரோந்து கப்பல்களை படகுகள் மீது மோதியும் சேதப்படுத்தி உள்ளனர்.
இலங்கை கடற்படையினர் வலைகளை அறுத்து எரிந்ததால் மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் கரை திரும்பினர். இலங்கை கடற்படையின் தொடரும் இந்த நடவடிக்கை மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications