போலி முகவரியில் சிம்கார்டு வாங்கிய ராம்குமார்... தூத்துக்குடியில் போலீஸ் துருவி துருவி விசாரணை
தூத்துக்குடி: பொறியாளர் சுவாதியை படுகொலை செய்ததாக கூறப்படும் ராம்குமார் தூத்துக்குடியில் போலி முகவரி கொடுத்து சிம்கார்டு வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடியில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பொறியாளர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ந்தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ராம்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவர் போலீசார் பிடியில் சிக்கிய போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் சிகிச்சைக்கு பின்பு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக உதவி ஆணையர் தேவராஜ் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராம்குமாரிடம் இருந்து கைப்பற்றிய செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர்.
அவரது சிம்கார்டை சோதனை செய்த போது அந்த சிம்கார்டு தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்த சங்கர் என்பவர் பெயரில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சென்னை தனிப்படையை சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர் நேற்று தூத்துக்குடி சண்முகபுரத்துக்கு சென்றனர்.
அப்பகுதியில் அவர்கள் விசாரணை நடத்தியதில் அந்த முகவரி போலியானது என தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மீண்டும் சென்னை திரும்பினர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications