பீரோவுக்கு அடியில் கட்டைப்பை வைத்த ராணிப்பேட்டை ஜோதி.. திறந்து பார்த்தால்? ஆடிப்போன ஆற்காடு, வேலூர்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில், நிறைமாத கர்ப்பிணிக்கு நடந்த சம்பவம், மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது. இதுகுறித்த விசாரணையை போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள். என்ன நடந்தது ஆற்காட்டில்?
நவீன மருத்துவம் வளர்ந்துவிட்ட நிலையிலும்கூட, இன்னும் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் நடைமுறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.. மருத்துவச்சிகள் என்று சொல்லப்படும் கைதேர்ந்தவர்கள் அன்றைய தினங்களில் பிரசவங்களை வீட்டிலேயே பார்த்து வந்தனர்.

ஆனால் இன்று கூகுளை பார்த்து பிரசவம் பார்ப்பது, அதிலும் இளைஞர்களே இப்படி ஆபத்தான நடவடிக்கைகளில் இறங்குவது, அதிர்ச்சியையும் கவலையையும் தந்து கொண்டிருக்கிறது.
ஆபத்தான பிரசவம்: வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதால், தாய், சேய் என இரு உயிர்களுக்குமே ஆபத்துகளும் பெருகிவருகின்றன.. இதன்காரணமாக, பரிதாபமான உயிர்பலிகளும் நடக்கின்றன.. இவைகளை தடுக்க தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்களை புகட்டியபோதும், பச்சிளம் குழந்தைகளின் மரணங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
நேற்று ராணிப்பேட்டையிலும் ஒரு குழந்தை இறந்துள்ளது.. சேலம் மாவட்டம் வாய்க்கால்பட்டறையில் தச்சுத்தொழிலாளியான தமிழ்ச்செல்வன் - ஜோதி தம்பதி வசித்து வருகிறார்கள்.. இவர்களுக்கு ஏற்கனவே, ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். 4-வது முறையாக கர்ப்பம் தரித்த ஜோதி, சமீபத்தில் ராணிப்பேட்டையிலுள்ள அவரது அம்மா வீட்டிற்கு வந்ததாகத் தெரிகிறது.
தமிழ்ச்செல்வன்: ஆனால், 7 மாதம் ஆனபிறகுதான் ஜோதி தாய்மை அடைந்திருந்தது அவரது கணவர் தமிழ்ச்செல்வனுக்கு தெரியவந்ததாம்.. அதுமட்டுமல்ல, ஜோதியின் பெற்றோருக்கே, தங்கள் மகள் கருவுற்றிருக்கிறாள் என்பது கடைசிவரை தெரியவே இல்லையாம்.
இந்த நிலையில், வீட்டில் இருந்த ஜோதிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.. இதனால, அவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்ததாக தெரிகிறது. பிறந்த பெண் குழந்தை இறந்துவிடவும், அதனை வீட்டின் பீரோவுக்கு அடியில் மறைத்து விட்டதாக கூறப்படுகிறது... அறை முழுவதும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும், மகள் மயங்கி விழுந்து கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்த ஜோதியின் பெற்றோர், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், ஜோதி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்..
கட்டைப்பை: அப்போதுதான், தன்னுடைய மகளுக்கு பிரசவம் நடந்துள்ளதும், இதன்காரணமாகவே ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதையும் அவர்கள் அறிந்துள்ளனர். அப்படியானால் குழந்தை எங்கே? என்று வீட்டிற்கு வந்து தேடிப்பார்த்தபோது இறந்த குழந்தையை கட்டைப்பையில் போட்டு, பீரோவிற்கு அடியில் ஜோதி மறைத்து வைத்திருந்ததை பார்த்தது அதிர்ச்சி அடைந்தன.
இதையடுத்து, கட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த குழந்தையை மறுபடியும் மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர். பிறகு ஜோதி, மற்றும் குழந்தையின் உடல்கள் வேலூர் மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஆற்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால், ஜோதிக்கு பிரசவ வலி ஏற்பட்டபோதே மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தால் தாய், சேய் இருவரையும் காப்பாற்றி இருக்கலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications