புதுவை: ரேஷன் மானியம்– குடும்பத்தலைவியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்
புதுவை: புதுச்சேரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரேஷன் மானியம் குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதிலாக மாதந்தோறும் ரூபாய் 300 வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் அட்டைக்கான மானியம் குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப அட்டை உள்ளோர், ஆதார் எண்ணுடன் குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கு நகலையும் வழங்க வேண்டும்.
இதனை நியாய விலைக் கடையிலோ, குடிமைப் பொருள் வழங்கல் துறையிலோ அளிக்கலாம். விவரங்களை தர தவறுபவர்களுக்கு மானியத் தொகையும், குடும்ப அட்டையும் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications