பீதியை கிளப்பும் கரோனா காய்ச்சல்... விமான நிலையங்களில் தீவிர உடற்பரிசோதனை
சென்னை: சீனாவில் கரோனா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், அந்நாட்டில் இருந்து தமிழகம் வருபவர்களிடம் தீவிர உடற் பரிசோதனை செய்யப்படுகிறது.
நிம்மோனியாவை ஏற்படுத்தி உயிரிழப்பு வரை கொண்டு செல்லக் கூடிய கரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருகிறது.
சாதாரணமாக சளியில் தொடங்கி படிப்படியாக மரணம் வரை கொண்டு செல்லும் கரோனா வைரஸ் பிராணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.

நோய்தடுப்பு
சீனாவில் கடந்த ஒரு மாதமாக கரோனா காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அங்கிருந்து தமிழகம் வருபவர்களிடம் தீவிர உடற் பரிசோதனை நடத்தப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனர்கள் மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடமும் இந்த சோதனை நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

அறிகுறி
கரோனா வைரஸை பொறுத்தவரை சாதராண சளி, காய்ச்சலில் தொடங்கி நிம்மோனியா வரை கொண்டு சென்று மரணத்தை கொடுக்கக்கூடிய கொடிய தன்மை உடையது. இதனால் இதனை பரவாமல் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.

சுற்றுலா பயணிகள்
இதனிடையே இந்த மாதத்தின் இறுதியில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் சீனாவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதற்குள் கரோனா காய்ச்சலை கட்டுக்குள் வைக்க சீன அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

2020-ம் ஆண்டு
கடந்த 2002-ம் ஆண்டு சீனாவில் இருந்து சார்ஸ் வைரஸ் பரவ தொடங்கிய நிலையில், சரியாக 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் புதிய வகை வைரஸான கரோனா வைரஸ் அதே சீன நாட்டில் இருந்து பரவத்தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications