மக்களை மதிக்காமல் ரேக்ளா பந்தயம்.. இளைஞர்கள் ஆவேசப் போராட்டம்.. கோவையில் பதட்டம்
கோவை: மக்கள் எதிர்ப்பு காரணமாக பலத்த பாதுகாப்புக்கு நடுவே கோபையில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றபோதிலும், மாணவர்கள் விரைந்து வந்து அதை தடுத்து நிறுத்தி, அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை கொடிசியா மைதானத்தில் ரேக்ளா பந்தயம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும், அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ரேக்ளா பந்தயம் தொடங்கியது. சுமார் 200 அதிக மாட்டு வண்டிகள் இதில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல வீரர்கள் போட்டியை புறக்கணித்தனர். இதனால் 3 வண்டிகள் மட்டுமே பங்கேற்றன.

இதற்கும் மக்கள் இடையூறு செய்ய வாய்ப்பிருப்பதாக கருதிய அரசு பந்தய பாதையின் இருபுறமும் போலீசாரை குவித்திருந்தது. வண்டிகள் ஓடத்தொடங்கிய நிலையில், கோபமடைந்த சுமார் ஆயிரம் மாணவர்கள் பைக்குகளில் அங்கு விரைந்து வந்து ரேக்ளா பாதையில் அமர்ந்து தர்ணா நடத்தினர். இதனால் பந்தயம் தடைபட்டது. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் போலீசாரால் என்ன செய்வது என தெரியவில்லை. அந்த இடமே பரபரப்பாக காட்சியளிக்கிறது.
கொங்கு மண்டலத்தில் குறுக்கு சால் ஓட்டம்.
— ganaesanmeganathan (@ganesantweets) January 22, 2017
ரேக்ளா பந்தயம்.
தமிழகமே கொந்தளிப்பை கண்டு கொண்டிருக்கும் போது கொடீசியாவில் குறுக்கு சால்..
வெட்கம்.
ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற காளைகளை பயன்படுத்தும் விளையாட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கேட்டு மக்கள் போராடி வரும் நிலையில், எப்படியாவது இந்த ஒற்றுமையை கலைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த போட்டி நடைபெற்றுள்ளது என்று மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications