மதம் மாறியதால் தலித்துகள் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை: திருமாவளவன்
சென்னை: ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாறுவதால் தலித்துகள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தந்தை அம்பேத்கர், பெளத்த மதத்திற்கு மாறிய அறுபதாம் ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு திருமாவளவன் அளித்த ஒரு பேட்டியொன்றில், தலித்துகள் மதம் மாறுவதால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வேறு மதத்திற்கு செல்வதால் தலித்துகள் என்ற அடையாளத்தை இழந்து சலுகைகளை இழந்ததுதான் மிச்சம் என்று கூறியுள்ளார்.
சாதி மறுப்பு என்பது அம்பேத்கரின் முக்கியமான லட்சியம். தலித்துகளுக்கு இழைக்கப்படும் அநீதியில் இருந்து தப்பிக்க, சாதி மறுப்பு மிக முக்கியமானதுதான் என்றபோதிலும் இது மட்டுமே போதுமானதாக இல்லை என்றும், மதம் மாறுவது என்பது தனிநபரின் சுதந்திரத்திற்கு உள்பட்டது என்றும் திருமா கூறியுள்ளார்.

திமுக, அதிமுக
தலித்துகளின் பிரச்னைகளில் அதிமுக எந்தக் கருத்தையும் சொல்வது கிடையாது. மிகவும் நெருக்கடி தரப்பட்டால் மட்டுமே திமுக, தலித்துகளுக்கு ஆதரவாகப் பேசுகிறது என்று கூறும் திருமாவளவன், ஜனநாயகத்தில் எண்ணிக்கைதான் முக்கியம். இதை இழப்பதால் தலித்துகளால் அரசியலில் சோபிக்க முடியாது என்றும் தனது அச்சத்தை வெளிப்படுத்தினார்.

மறுபரிசீலனை
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் கூறுகையில், அம்பேத்கர் மதம் மாறுவதற்காகச் சொல்லப்பட்ட காரணங்கள், இந்த அறுபது ஆண்டுகளில் எந்த அளவுக்கு ஈடேறியிருக்கிறது என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது.

கிறிஸ்தவத்தில் ஜாதி
இன்னொரு மதத்தைத் தழுவுவதன் மூலம் அவர்களுக்கு பொருளாதார பலமோ, மனரீதியான பலமோ கிடைக்குமா? என்றால், அதையும் உறுதியாகக் கூற முடியவில்லை. கிறிஸ்தவ மதத்திற்கு மாறிச் சென்ற தலித்துகள் அங்கேயும் தீண்டாதவர்களாகத்தான் நடத்தப்படுகிறார்கள் என்பதை தலித் கிறிஸ்துவர்கள் படும் துயரங்களே எடுத்துக்காட்டுகின்றன.

எண்ணிக்கை தேவை
நமது நாடாளுமன்ற ஜனநாயக முறையில், தலித்துகளுக்கு இருக்கும் ஒரே பலம் எண்ணிக்கை பலம்தான். அந்த பலத்தைக் கொண்டுதான் அவர்கள் ஏதேனும் குறைந்த அளவாவது அதிகாரத்தை கைப்பற்ற முடியும். அந்த எண்ணிக்கை பலத்தை குறைப்பதாக, மதமாற்றம் இருந்துவிடக் கூடாது. தலித் கிறிஸ்துவர்களை தலித்துகளாக அங்கீகரித்து அவர்களுக்கு இடஒதுக்கீடு முதலான சலுகைகளை வழங்க வேண்டும். இவ்வாறு ரவிக்குமார் தெரிவித்தார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications