காவிரி பற்றி ஆலோசிக்க எடப்பாடியிடம் நேரம் கேட்டுள்ளேன்.. கமல்ஹாசன் அதிரடி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம் பற்றி கமல்-வீடியோ

    சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்தார்.

    சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேசிய நெடுஞ்சாலை அத்தாரிட்டி என்று ஒன்றுதான் நாட்டின் பல பகுதிகளில் சாலை அமைக்கிறது. எத்தனையோ நில விவகாரங்களால் வழக்குகளை எதிர்கொள்கிறது. ஆனாலும், ரோடு போடத்தான் செய்கிறார்கள். அதுபோலத்தான், காவிரி தொடர்பான உத்தரவை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அவசியம்.

    Request to meet Chief Minister Edappadi Palanisamy: Kamal Hassan

    தண்ணீர் விஷயத்தில் ஓட்டு வேட்டைக்காக விளையாடாதீர்கள். காவிரி மேலாண்மை வாரியம் குறித்து ஆலோசிக்க, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டுக்கொண்டுள்ளேன். அவர் நேரம் ஒதுக்கினால் சந்திக்க தயாராக உள்ளேன்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தமிழக அரசு யார் பெயரை சொல்லி (ஜெயலலிதா) ஆட்சியை நடத்துகிறார்களோ அவரது பெயருக்கே களங்கமாகும். எம்.பி.க்கள் ராஜினாமா செய்து அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும். காவிரி தொடர்பாக ரஜினிகாந்த் கூறியது நல்ல கருத்து. ஆதரிக்கிறேன்.

    இவ்வாறு கமல் தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+