For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லண்டன் டாக்டர் ரிச்சர்ட் விசிட்டிங் கார்டெல்லாம் கூட எனக்கு கொடுத்தார்... வைகோ நெகிழ்ச்சி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் தமக்கு விசிட்டிங் கார்டைகூட கொடுத்ததாக மதிமுக பொதுச்செயலர் வைகோ நெகிழ்ச்சியுடன் கூறினார்.

ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந் தேதி இரவு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Richard Beale gives visiting card, says Vaiko

மருத்துவமனையில் நீண்டநாட்கள் தங்கி ஜெயலலிதா சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு தலைவர்கள் தொடர்ந்து வருகை தருகின்றனர்.

இன்று மருத்துவமனைக்கு வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, முதலமைச்சரின் சிகிச்சை முறை குறித்து என்னிடம் விளக்கினார். அவருடைய விசிட்டிங் கார்டைகூட என்னிடம் கொடுத்தார்.

அப்போது அவரிடம், நாங்கள் மனதளவிலே நெகிழ்ந்து போய் இருக்கிறோம். இரண்டு முறை லண்டனில் இருந்து வந்து இருக்கிறீர்கள். எங்களுடைய முதலமைச்சரின் உடல் நலத்தை குறித்த அக்கறையோடு, உங்களைப் போன்ற உயர்ந்த மருத்துவர்களுடைய வைத்தியத்திலேயே நலமாக இருப்பதை நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறேன் என்று சொன்னேன் என்றார்.

English summary
MDMK General Secretary Vaiko said that Dr. Richard Beale from UK who is treating TN CM Jayalalithaa gave his visiting card.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X