For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்.கே. நகருக்கு அக்டோபருக்குள் இடைத் தேர்தல்?

Google Oneindia Tamil News

சென்னை: பீகார் சட்டசபைத் தேர்தல் செப்டம்பர் - அக்டோபருக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். எனவே அந்த காலகட்டத்தில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலும் நடைபெறும் என்று தெரிகிறது. அதாவது இன்னும் 5 மாதத்திற்குள் ஜெயலலிதா எம்.எல்.ஏ ஆகி விடுவார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி பேசுகையில், பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான அனைத்துப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. அங்கு செப்டம்பர் - அக்டோபரில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். தேர்தல் தேதி இன்னும் இறுதி செய்ய்படவில்லை என்றார் ஜெய்தி.

RK Nagar may go for by poll with Bihar Assembly elections in September-October

தற்போது தமிழகத்தில் ஆர்.கே.நகர் தொகுதி காலியாகியுள்ளது. அங்கு உறுப்பினராக இருந்து வந்த அதிமுகவின் பி. வெற்றிவேல் இன்று விலகி விட்டார். தொகுதி காலியாக இருப்பதாக சபாநாயகரும் அறிவித்து விட்டார். இங்கு ஜெயலலிதா போட்டியிடுவார் என்று தெரிகிறது.

எனவே பீகார் பொதுத் தேர்தல் நடைபெறும் சமயத்தில் ஆர்.கே.நகருக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. எனவே ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார் வருகிற அக்டோபர் மாதம் வரை அவர் உறுப்பினராக இல்லாமலேயே முதல்வராக நீடிப்பார் என்றும் தெரிகிறது.

ஒரு தொகுதி காலியாகி விட்டால் அடுத்த 6 மாதத்திற்குள் அங்கு இடைத் தேர்தல் நடத்தப் படவேண்டும். அந்த அடிப்படையில், ஆர்.கே.நகர் தொகுதியில் நவம்பருக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் பீகார் தேர்தலோடு சேர்த்து இங்கும் இடைத் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.

English summary
RK Nagar may go for by poll with Bihar Assembly elections in September-October, according to CEC's today interview on the Bihar polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X