ஜெ போட்டியிட்டபோது கூட இவ்வளவு பதிவானதில்லை.. ஆர்.கே.நகரில் அதிரடி வாக்குப் பதிவு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு பதிவு- வீடியோ

    சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டபோது கூட ஆர்.கே.நகரில் இத்தனை வாக்குகள் பதிவானதில்லை. ஆனால் தற்போது அதிக அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    கடந்த 2016ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகரில் 2வது முறையாக போட்டியிட்டார். அப்போது அங்கு 67.91 சதவீத வாக்குகள் பதிவானது. அப்போது திமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் போட்டியிட்டிருந்தார். ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

    RK Nagar registers 75% votes

    இந்த முறை ஜெயலலிதா மறைவு காரணமாக அங்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில் அதிமுக, தினகரன், திமுக, பாஜக, நாம் தமிழர் என கட்சிகள் போட்டியிட்டன. இங்கு இதுவரை இல்லாத அளவு அதிக அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன.

    மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்தபோது 74.5 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இன்னும் சில வாக்குச் சாவடிகளில் பெரும் திரளானோர் நின்று ஓட்டுப் போட்டு வருகின்றனர். எனவே வாக்குப் பதிவு மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது. இதன் மூலம் கடந்த தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தை இந்த தேர்தல் மிஞ்சியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+