ஆர்.கே.நகரில் குற்றவாளிகளுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் மக்கள்... திருச்சி சிவா உற்சாகம்
விருதுநகர்: ஆர்.கே.நகரில் குற்றவாளிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா கூறினார்.
ராஜபாளையம் சட்டசபைத் தொகுதி திமுக சார்பில் திமுக. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 65-வது பிறந்த நாளை முன்னிட்டு ஜவகர் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், நகர செயலாளர் ராமமூர்த்தி, கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில கொள்கை பரப்புச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி., விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் திருச்சி சிவா பேசுகையில், சசிகலாவின் பினாமி அரசான எடப்பாடி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. தினகரன் மீதும் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அ.தி.மு.க. மீது மக்களுக்கு வெறுப்பு எற்பட்டுள்ளது.
ஊருக்கே வெளிச்சம் போட்டு காண்பிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் தக்கபாடம் புகட்டுவார்கள். திமுக வின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுவிட்டது. எனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்றார் திருச்சி சிவா.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications