குண்டும் குழியுமான சாலை - சாலையில் வாழை நட்டு நூதன போராட்டம்
நாகர்கோவில் அருகே குண்டும் குழியுமான சாலையில் நிரம்பியுள்ள தண்ணீரை இறைத்து வாழைக்கன்றை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் விவசாயிகள்.
நாகர்கோவில்: குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலையில் வாழை கன்றை நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் அருகே அருமனை பகுதியில் பழுதடைந்துள்ள சாலைகளை செப்பனிடக்கோரி மார்க்சிஸ்ட் சார்பில் வாழை நடும் போராட்டம் நடந்தது. குழித்துறை நெடுஞ்சாலை உட்கோட்டத்திற்குட்பட்ட குழித்துறை - ஆலஞ்சோலை சாலை, உத்திரங்கோடு - மஞ்சாலுமூடு சாலை உள்ளிட்ட பல சாலைகள் மிக மோசமாக பழுதடைந்துள்ளது.

இந்த சாலைகளை செப்பனிடக் கோரி அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து பழுதான சாலைகளை சீரமைக்ககோரி மார்க்சிஸ்ட் சார்பில் விளக்க கூட்டமும், வாழைநடும் போராட்டமும், ரோட்டில் தேங்கியுள்ள தண்ணீரை இறைக்கும் போராட்டமும் உத்திரங்கோட்டில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் நடராஜன் தலைமை வகித்தார். முழுக்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் மரியசெல்வி விலாசினி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பேபி, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ராஜூ, மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் சசிகுமார், ஜெயகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நூதன போராட்டம் பொது மக்களை வெகுவாக கவர்ந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications