For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்ஜிஆர் ஆட்சிக் கால மோசடி வழக்கில் தீர்ப்பு: ராபின் மெயினுக்கு 7 ஆண்டு சிறை- ரூ1.8 கோடி அபராதம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மோசடி வழக்கில் ராபின் மெயினுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ1.8 கோடி அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1984-ம் ஆண்டு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் காளிமுத்து வேளாண்மைத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது 8 வங்கிகளில் ராபின் மெயின் என்பவருக்கு கடனாக 56 லட்ச ரூபாயை போலி ஆர்சி புத்தகங்கள் மூலமாக முறைகேடாக வாங்கி தந்தார் காளிமுத்து என்ற குற்றச்சாட்டு பெரும் புயலாக வீசியது.

Robin Mein sentenced to 7 years in prison

இது தொடர்பாக சென்னை நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்தது. பின்னர் இவ்வழக்கில் காளிமுத்து விடுவிக்கப்பட்டார். பின்னர் காளிமுத்து காலமானார்.

30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதில் 16 பேரில் 11 பேரை விடுதலை செய்து சிபிஐ நீதிமன்ற நீதிபதி வெங்கடசாமி உத்தரவிட்டார்.

ராபின் மெயின், சூர்யகுமார் உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அபராதமாக ரூ.1 கோடியே 8 லட்சமும் விதிக்கப்பட்டது.

English summary
Madras High cour convicted and sentenced to 7 years for Robin Mein in 30 year old fake RC books case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X